பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் வாழ்வாதார நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 6ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் தொடர்ந்து சுழற்சி முறையிலான கடனுதவி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 40 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
 

By admin