சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இளையோர் இல்ல இயக்குனர் அருட்தந்தை சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனற்கிளிற் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
கலைநிகழ்வுகள் இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி என்பன இடம்பெற்ற இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.