சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புநிகழ்வு 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன், அருட்சகோதரி கிறிஸ்ரினா செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் திருமதி. சிவமணி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.