மன்னார் மறைமாவட்டம் தேவன்பிட்டி சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் திருத்தல கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்திருத்தல திறப்புவிழா 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் இறைமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.