இலங்கை – கண்டி அம்பிட்டிய தேசிய உயர் குருத்துவ கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை குயின்ரஸ் பெர்னான்டோ அவர்கள் அண்மையில் நியமனம் பெற்றுள்ளார்.
கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த காலங்களில் நீர்கொழும்பு BCI உயர்கல்வி நிறுவனத்தின் துணை அதிபராக பணியாற்றியுள்ளதுடன் வருகின்ற ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தனது புதிய பணிப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.