மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பேராலய திறப்புவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரீன் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து கலைநிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், இறைமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.