யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் திரு.இராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்ததில் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பொதுநிலையினர் கழகத்தின் கடந்தகால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் பொதுநிலையினர் அறிவுப் போட்டி வருகின்ற மாதம் 08ஆம் திகதி எனவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் நிகழ்வு 15ஆம் திகதி புதுக்குடியிருப்பில் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டன.