மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எறிக் றொசான் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் காலைத்திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் மாலை கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
கலைநிகழ்வில் இளவாலை திருக்குடும்ப கன்னியர்மட ஓய்வுபெற்ற அருட்சகோதரி சோபியா செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேலும் மறைக்கல்வி வாரத்தை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை நட்புமண் சிறுவர் பூங்காவிற்கு களஅனுபவப் பயணம் மேற்கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.