தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மானிப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் 24ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை தெடர்ந்து மறைக்கல்வி மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், மறையாசிரியர்கள், மறைக்கல்வி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.