மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சிறுநாவற்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புனித வின்சென்டிப் போல் திருவிழா 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலியை தொடர்ந்து தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அங்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் தியான மண்டபத்துக்காண அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
தியான இல்ல இயக்குநரான இந்திய நாட்டின் வின்சென்சியன் சபையை சேர்ந்த அருட்தந்தை சேவியர் அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.