இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் இருந்து இவர் பெற்றுக்கொண்டதுடன் வருகின்ற ஒக்டோபர் மாதம் முதல் தனது ஆயர் பணியை சிவகங்கை மறைமாவட்டதித்தில் தொடர இருப்பதாகத் திருப்பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.