கோப்பாய் அன்னை தெரேசாள் அன்புக்கன்னியர் மடத்தில் புனித அன்னை தெரேசாள் திருவிழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.
கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி மில்றெட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருநாள் திருப்பலியில் மறையுரையாற்றிய குரு முதல்வர் அவர்கள் புனித அன்னை தெரேசாள் தனது வாழ்வில் திருப்பலி, நற்கருணை பிரசன்னம், இறைவார்த்தை தியானம் மற்றும் நீண்ட செப வாழ்வின் ஊடாக இயேசு அனுபவத்தை பெற்றதனால்தான் அடுத்தவரில் இயேசுவை கண்டு அவர்களுக்கு பணியாற்ற முடிந்ததென சான்று பகர்ந்ததை எடுத்துரைத்து நாமும் நமது ஆழமான செபவாழ்வின் ஊடாக இயேசுவை அனுபவித்தால் அன்றி அடுத்தவரில் இயேசுவை அடையாளம் காண முடியாதெனவும் தெரிவித்தார்.
அன்புக்கன்னியர் மடத்தில் பராமரிக்கப்பட்டுவரும் முதியோர், நோயாளர்கள், அனாதைகள், வலுவிலந்தோர் ஆகியோரோடு குருக்கள் துறவிகள் இத்திருநாள் திருப்பலியில் பங்குபற்றினார்கள்.