வவுனியா மதவுவைத்தக்குளம் தோணிக்கல் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 09ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை அருட்குமரன் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.