தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கருத்தமர்வும் சிரமதான நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிநடத்தலில் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய கருத்தமர்வு நிகழ்வில் 26 வரையான இளையோர் பங்குபற்றியதுடன் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.
அத்துடன் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளையோர்தின சிறப்பு திருப்பலியும் அங்கு ஒப்புக்கொடுக்கப்ட்டது.