யாழ். திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் 75 ஆவது இதழ் பவள இதழாக 240 வரையிலான பக்கங்களுடன் அறுபதிற்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி அண்மையில் வெளிவந்துள்ளது.
கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், சினிமா, உட்பட பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதை, நூல் மதிப்பீடுகள், பத்தி,நேர்காணல் என பல்வேறு விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது.
‘கலைமுகம்’ இதழ் 1990ஆம் ஆண்டு முதல் திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.