பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மடுத்திருத்தல பிரதேசத்தில் பணியாற்றிவரும் போர்டோவின் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட HF Bian உற்பத்திகள் வணிக நிலைய திறப்புவிழா கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மடுத்திருத்தல திருக்குடும்ப வளாகத்தில் அமையப்பெற்ற இவ்வணிக நிலையத்தை மன்னார் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்கள் ஆசீர்வதிக்க திருக்குடும்ப கன்னியர் மட மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்கள் திறந்துவைத்தார்.