தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்தத் திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெகன் குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் 5.00 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி இடம்பெறுமெனவும் 22ஆம் திகதி நற்கருணை விழாவும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படுமெனவும் பரிபாலகர் தெரிவித்துள்ளார்.