ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் வேல்ட் விசன் நிறுவனமும் கோறளைப்பற்று வாழைச்சேனை சிறுவர் கழகமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
வேல்ட் விசன் முகாமையாளர் திரு. அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியல் வேல்ட் விசன் முகாமையாளர் அவர்களும் வேல்ட் விசன் அபிவிருத்தி இலகுபடுத்துனர் திருமதி கரோலினா அவர்களும் உளஆற்றுப்படுத்தல் நிலைய திறன் அபிவிருத்தி இலகுபடுத்துனர் திரு. மரியதாஸ் சூசைதாசன் அவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டதுடன் பேரணி முடிவில் வாழைச்சேனை கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.