ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த 11ஆம், 12ஆம் திகதிகளில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை செபமாலை பவனியுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி நற்கருணை ஆராதனையும் 12ஆம் திகதி சனிக்கிழமை திருவிழா திருப்பலியும் இடம்பெற்றன.
திருநாள் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தர்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வழிபாடுகளில் ஜேர்மன் நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பத்தாயிரம் வரையான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.