சமய ஒழுக்க அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்காககொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமய ஒழுக்க கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்,அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தல், ஞாயிறு தினங்களில் மாணவர்களைஅறநெறிப் பாடசாலைக்குச் செல்ல ஊக்கப்படுத்தல் மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை தவிர்க்க தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சமயத்தலைவர்களும் அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.