மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து முதியவர்களை மகிழ்வூட்டி கௌரவிக்கும் நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஒல்பன் அவர்கள் முதியோருக்கான கருத்துரையை வழங்க திரு. ஜெகன் அவர்கள் வளவாளராக கலந்து முதியோர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்தார்.
அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த திரு. ஜெயம் அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதியோர்களை கௌரவித்து அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
 

By admin