கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ்.மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன்அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 130 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 30 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வும் மறையாசிரியர்களுக்கான போதனாமுறை பற்றிய செயலமர்வும் இடம்பெற்றன.