வின்சென்டிப் போல் தேசிய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி நல்லாயன் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
 
தேசிய ஆன்மீகஇயக்குநர் அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த வின்சென்டிப்போல் அங்கத்தவர்களும் ஆன்மீக குருக்களும் பங்குபற்றியிருந்தனர்.
 
தமிழ்நாடு தூத்துக்குடியை சேர்ந்த திரு. பிரான்சிஸ் அவர்கள் வளவாளராக கலந்து இந்நிகழ்வை நெறிப்படுத்தியிருந்ததுடன் இந்நிகழ்வில் ஆசிய நாடுகளுக்கான உபதலைவர் திரு. யோன்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
 
தமிழ், சிங்கள மொழிகள் பேசுவோருக்காக இருவேறு பிரிவுகளாக கொழும்பிலும் கண்டியிலும் இக்கருத்தமர்வு நடைபெற்றுள்ளது.

By admin