மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் சிறார்களுக்கான முதல்தன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.
யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 18 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். அத்துடன் 31ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழாவும் 1ஆம் திகதி திருவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை தீவகமறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.