திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டிந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து மக்களுடனும் குருக்கள் துறவிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
யாழ். புனித மரியன்னை பேராலயம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம், கொழும்புத்துறை புனித சவேரியார் உயர்குருத்துவக் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, புனித மடுத்தீனார் சிறிய குருமடம், செபமாலைதாசர் சபை ஆச்சிரமம், திருமறைக்கலாமன்ற கலைத்தூது ஓவியக்கூடம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், கரம்பொன் ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனை பங்கு, மொண்ட்போட் சர்வதேச பாடசாலை, இளவாலை புனித அன்னாள் ஆலயம், புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பரந்தன் செபமாலைதாசர் கன்னியர்மடம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம், புனித இராயப்பர் ஆலயம், கிளிநொச்சி திரேசம்மா ஆலயம், யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடகமையம், கியூடெக் நெபாட் வலை உற்பத்திநிலையம், திருச்சிலுவை கன்னியர் சுகநல நிலையம், எமிலியானுஸ் குருக்கள் தங்குமிடம், யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் அகியவற்றை தரிசித்து அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றினார்.
மேலும் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குருக்கள் துறவிகளுடனான ஒன்றுகூடலில் கலந்து தற்கால நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.