மன்னார் வாழ்வுதயம் கரித்தாஸ் நிறுவனத்தின் கணினி தொழினுட்ப மையத்தினால் முன்னெடுக்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலாளர் கற்கைநெறியின் NVQ தரம் மூன்றை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 24 மாணவர்கள் இக்கற்கைநெறியை நிறைவுசெய்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்கள்.