நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் முகமாக நவாலி புனித பேதுருவானவர் ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 50 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.