நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 24ஆம் திகதி சனிக்கிழமை பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அருட்தந்தை தயாபரன் மற்றும் அருட்தந்தை ஜோய் மரியரெட்ணம் அவர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்த இவ் அருட்சாதன திருப்பலியில் 12 சிறார்களுக்கு முதல்நன்மை அருட்சாதனம் வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ந்து 28ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் 29ஆம் திகதி திருவிழா திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவா போல் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதர்களின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றன.