பண்டத்தரிப்பு பங்கிலுள்ள மாகியம்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் மெக்சிக்கோ குவாடலூப் அன்னையின் திருச்சொருபம் ஸ்தாபிப்பதற்காக அமைக்கப்பட்டுவந்த கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா நிகழ்வு 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அன்னையின் திருச்சுருபம் தாங்கிய கட்டட திறப்புவிழாவும் இடம்பெற்றது. இதன்போது அன்னையின் பிரார்த்தனை அடங்கிய நவநாள் துண்டுப்பிரசுரமும் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மாகியம்பிட்டியைச் சேர்ந்த திரு. செபராஜ் அவர்களால் இச்சொருபம் மெக்சிக்கோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு அவருடைய அனுசரணையில் இக்கட்டடம் அமைக்கப்பட்டதும் இங்கு குறிப்படத்தக்கது.