நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஏற்பாட்டில் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.
 
பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 
அருட்சகோதரி கிறிஸ்ரினா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 35 வரையான பீடப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

By admin