யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியாள் றோ.க.த.க பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு பாதணிகளும் பயிற்சி புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த தவக்காலத்தில் அடைக்கல அன்னை பங்குமக்களின் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்தே மாணவர்களுக்கான இக்கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

By admin