யாழ் திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருமறைக்கலாமன்ற பிராந்திய மன்றங்களின் இணைப்பாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி கடந்த சனிக்கிழமை றக்கா வீதியில் அமைந்துள்ள கலாமுற்றத்தில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் குருத்துவ தினத்தை நினைவுகூர்ந்து நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை மன்ற இயக்குநர் அருட்தந்தை ஜெயசேகரம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியைத் தொடர்ந்து இணைப்பாளர்களுக்கான கருத்தமர்வும் கலந்துரையாடலும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் இலங்கையின் பல மாவட்டங்களிலும் இயங்கிவரும் திருமறைக்கலாமன்ற தமிழ், சிங்கள பிராந்திய மன்றங்களின் இணைப்பாளர்கள் 20 பேர் கலந்துகொண்டனர்.