யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இளையோர் மன்றத்தின் உதவியுடன் ஊடக கல்வி தொடர்பாக முன்னெடுக்கபட்ட இக்கருத்தமர்வில் 40 வரையான மாணவர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வில் வளவாளர்களாக JSAC நிறுவனத்தினர் கலந்து மாணவர்களை வழிப்படுத்தினர்.