புதுக்குடியிருப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலய திறப்பு விழா நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலயத்தை ஆசீர்வைத்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரின் நிறைவில் இவ்வாலயம் முற்று முழுதாக அழிவுற்ற நிலையிலிருந்தது. மக்களின் மீள்குடியேற்றத்தின் பின் இவ்வாலயத்திற்கான அடிக்கல் ஒய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களினால் 2013ஆம் ஆண்டு நாட்டி வைக்கப்ட்டது.
தொடர்ந்து ஆலய கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கபட்டடு பலரின் அயராத முயற்சியினால் இவ்வாலயம் கட்டப்பட்டு இறை நம்பிக்கையின் அடையாளமாக உயர்ந்து நிற்கின்றது.