யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் வழிநடத்தலில் மன்றத் தலைவர் செல்வன் ஜெலோமியதாஸ் ஜெமில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை பிரதி கல்வி பணிப்பாளரும், மூத்த எழுத்தாளருமான திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவர் திரு. ஜேம்ஸ் றொக்கட்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.