மறைந்த முந்நாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலி 5 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று வத்திக்கான் புனித பேதுருவானவர் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
இத்தருணத்தில் எமது பங்குத் திரு அவை ஆலயங்களிலும் மடங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் வசதியான நேரங்களில் ஆன்மா இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக்கொடுத்து ஆலயங்களிலும் மடங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் அரைக்கம்பத்தில் திருத்தந்தையின் கொடியை ஏற்றி, இறுதிச் சடங்குகள் வத்திக்கான் நேரம் காலை 9.30 மணிக்கு அங்கு ஆரம்பமாகும் போது இலங்கை நேரம் பிற்பகல் 2.00 மணிக்கு ஆலயங்களில் துக்கமணியை ஒலித்து திருத்தந்தையின் அடக்கச்சடங்கு திருப்பலியுடன் நாமும் இணைந்திருப்போம் என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பான அழைப்பு விடுத்துள்ளார்.