மரியன்னை எத்தீங்குமின்றி எமை காக்கும் வல்லமையுள்ள தாய் எனவே அத்தாயிடம் உலகில் தீமைகள் அகல மன்றாடுங்களென தனது புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மலர்கின்ற 2023ஆம் புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும் இனியதாய் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனங்களிலும் நிறையவே உண்டு. இவ் ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் மலரும் 2023ஆம் ஆண்டை தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்.
இப்புதிய ஆண்டு முழுவதும் தேவ அன்னை தன் தாய்க்குரிய அன்போடும் பாசத்தோடும் எம்மைப் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும் எனவும் தேவ தாயை எப்போதும் எங்கிருந்தாலும் என்ன நடந்தாலும் உங்கள் அன்னையாக மனதிலிருத்தி என்ன செய்தாலும் அன்னையின் துணையுடன் செய்யுங்கள்.
அன்னை வெற்றியையே பெற்றுத் தருவாள் எனவும் தனது செய்தியில் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.