யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட ரீதியிலான கரோல் குழுப்பாடல் போட்டி 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் “போதை அடிமை விலங்கொடிக்கும் கிறிஸ்து பிறப்பு” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இப்போட்டியில் மறைமாவட்ட ரீதியாக 13 பங்குகள் போட்டியிட்ட நிலையில் நாவாந்துறைப் பங்கு முதலாம் இடத்தையும், நாவாலிப் பங்கு இரண்டாம் இடத்தையும், பாசையூர் பங்கு மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.