யாழ். பல்கலைகழக கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய நாகரீக துறையின் ஏற்பாட்டில், கத்தோலிக்க இஸ்லாமிய நாகரீக துறை முன்னாள் தலைவர் அமரர் அருட்கலாநிதி மத்தாயஸ் அவர்ளின் நினைவாக முன்னெடுக்கப்ட்ட அஞ்சலி நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய நாகரீக துறை தலைவர் அருட்கலாநிதி போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலர் அஞ்சலியும் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் சுதாகர், தென்னிந்திய திருசபை ஆயர் ஜேபநேசன், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மற்றும் குருக்கள், விரிவுரையாளர்கள் அருட்தந்தையின் குடும்ப உறவுகள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து இவ் அஞ்சலி நிகழ்வில் பங்குற்றினார்கள்.