தவக்காலத்தில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படுவரும் சிலுவைப்பாதை தியானம் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் இறைமக்களின் பக்திபூர்வமான பங்களிப்புடன் வீதிச் சிலுவைப்பாதை தியானமாக சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தர்மபுரம், விசுவமடு, சற்கோட்டை, மாரீசன்கூடல், நெடுந்தீவு ஆகிய பங்குகளில் 8ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பங்கு எல்லைகளுக்குட்பட்ட வீதிகளில் பங்கு மக்களினால் சிலுவைப்பாதை பக்தி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.