மல்வம் பங்கு இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
வவுனியா கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரையாக சென்ற இவர்கள் அங்கு திருச்செபமாலை, சிலுவைப்பாதைத் தியானத்தில் பங்குபற்றியதோடு தொடர்ந்து மடுத் திருத்தலத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற திருப்பலியிலும் பங்கெடுத்தனர். இந்நிகழ்வு மல்வம் பங்குத்தந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.