இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு நிகழ்வும் 2021 ஆம் கல்வியாண்டு செயற்பாட்டை முடித்துக்கொண்டு தரம் 1க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரணைப்பாலை பங்கு தந்தை அருட்திரு மரியதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.