திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற திருப்பாடுகளின் நாடகம் இம்முறையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.
இதற்கான பிரதி வழங்கும் வைபவம் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விபூதிப் புதனன்று மாலை 4.30 மணிக்கு இல.17, மாட்டீன் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைஞான சுரபி தியான இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவ்வாற்றுகையில் பங்கேற்று நடிக்க விரும்புகின்ற ஆண், பெண் இருபாலாரையும் குறித்த நிகழ்விற்கு வருகை தருமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.