அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் குருநகர் பீடப்பணியாளர்கள் மற்றும் அளம்பில் பீடப்பணியாளர்கள் ஒன்றிணைந்த தலைமைத்துவ பயிற்சி கடந்த 16,17ஆம் திகதிகளில் நடைபெற்றது.
குருநகர் பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் அளம்பில் பங்குத்தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அருட்திரு நிலான் மற்றும் அருட்திரு எரோனியஸ் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்ற 2நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் 50ற்கும் மேற்பட்ட பீடப்பணியாளர்கள் கலந்து பயனடைந்தனர்.