யாழ் மறைமாவட்டத்தில் கடந்த 16ஆம் திகதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட கிளறேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்திரு தேவபாலன் பற்றிக் ஜோண்சன் அவர்கள் தனது முதல் திருப்பலியை 19ம் திகதி கடந்த சனிக்கிழமை பெரியவிளான் பங்கின் தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.
இவர் பெரியவிளான் பங்கின் 12வது குருவாகவும் பெரியவிளான் பங்கின் தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் 7வது குருவாகவும் மற்றும் பெரியவிளான் பங்கின் கிளரீசியன் சபையை சேர்ந்த 4வது குருவாகவும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.