மானிப்பாய் பங்கில் அமைந்துள்ள புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் அவ்வாலயத்தை சேர்ந்த அனைத்துக் குடும்பங்களையும் ஒன்றிணைத்த குடும்ப விழா 13ஆம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடப்பட்டது.
பங்குத்தந்தை அருட்திரு றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோர், சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான கருத்தமர்வுகள் இடம்பெற்றதுடன் அனைவருக்குமான மதிய உணவு அங்கு மக்களால் சமைக்கப்பட்டு குடும்பங்களாக இணைந்து மதிய உணவில் கலந்துகொண்டார்கள். சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து மக்களும் வேற்றுமைகள் பிரிவினைகளைக் கழைந்து ஒற்றுமையாக இணைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.