மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் வருடம் தோறும் இடம்பெறுகின்ற அனைத்து கிறீஸ்தவ அருட்பணியாளர்களுக்கான ஒன்றிப்பு வார வழிபாடும் கலந்துரையாடலும் இவ் வருடமும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இவ் ஒன்றிப்பு வார வழிபாட்டின் இறுதி நிகழ்வு கடந்த 23ஆம் திகதி மாலை 4மணியளவில் மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது.