முல்லைத் தளிர் என்ற காலாண்டு சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலய பங்குப் பணிமனையில் பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் தலைமையில் நடைபெற்றது. நம்பிக்கையூட்டும் மறைக்கல்வி என்ற தலைப்பில் ஆடி – புரட்டாதி மாத காலாண்டு இதழாக அமைந்த இச்சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்து சஞ்சிகையை வெளியிட்டுவைத்தார்.
இச்சஞசிகையின் முதற்பிரதியை ஆரேபணம் இளைஞர் இல்ல இயக்குனர் அருட்திரு எமில் ராஜேஸ்வரன் போல் அவர்கள் பெற்றுக்கொள்ள இச்சங்சிகைக்கான மதிப்பீட்டுரையை புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் அருட்திரு றொபின்சன் அவர்கள் வழங்கியிருந்தார். முல்லைத்தீவு பங்கு மறையாசிரியர் ஒன்றியத்தின் கன்னிப் படைப்பாக அமைந்த இவ்இறையியல் சஞ்சிகை மறைந்த நிரந்தர மறையாசிரியர் திரு ஆரோக்கிய நாதர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து வெளியிடப்பட்டமையும் இந்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழவு கோவிட் -19 சுகாதாhர விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட் பங்கோற்பாளர்களுடன் இடம்பெற்றது.