யாழ்ப்பாணம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22 ற்கான புதிய கல்வி ஆண்டின் ஆங்குரார்ப்பண நிகழ்வு கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் குருமட சிற்றாலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து புதிய கல்வி ஆண்டிற்கான அரங்க நிகழ்வுகள் குருத்துவ கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபோறுகளை பெற்ற அருட்சகோதரர்ளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
அன்றைய நாளுக்கான விரிவுரையை சூழமைவு மேய்ப்புப்பணியில் ஒன்றிப்புத்திருஅவை: ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் பார்வையில்இ என்ற தலைப்பில் சிறிய குருமட அதிபர் அருட்திரு ஜெயரஞ்சன் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வுகள் குருமட அதிபர் அருட்திரு கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.