எழுதுமட்டுவாள் கிளாலி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த புனித யாகப்பர் ஆலயம் 16.07.2021 வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் புனித யாகப்பர் ஆலயத் திருவிழாவிற்கு ஆயத்தமாக புனிதரின் கொடி ஆயர் அவர்களினால் ஏற்றப்பட்து. தொடர்ந்து அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்ட புனிதரின் புதிய ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு ஆயர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து ஆலயத்தின் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய ‘கிளாலி மகிமையின் சுவடு’ என்கின்ற நினைவு மலரும் ‘சந்தியோகு அம்மானை’ நூலும் அத்துடன் இணைந்த அம்மானை பாடல் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இப்புதிய ஆலயத்திற்கான அடிக்கல் 2016 ஆம் ஆண்டு இதே தினத்தில் முன்நாள் பங்குத்தந்தை அருட்திரு ஜேம்ஸ் அவர்களால் நாட்டப்பட்டது. இவ்விடத்தில் அமைந்திருந்த யாகப்பர் ஆலயம் 410 வருடங்கள் பழமைவாய்ந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகள் அனைத்தும் மிருசுவில் பங்குத்தந்தை அருட்திரு இருதயதாஸ் அவர்களின் தலமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.